ADDED : ஆக 28, 2026 06:44 PM
அ நிறம் | அளவு
வடமதுரை, ஆக.29-
தங்கம்மாபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்ததாக கூறப்படும் விவகாரத்தில் அதை செய்தவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மா.கம்யூ., சார்பில் அய்யலுாரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஒன்றியக்குழு உறுப்பினர் மனோகரன் ஜோதிபாசு தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மாவட்ட செயலாளர் பிரபாகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர் மலைச்சாமி பங்கேற்றனர்.
