ADDED : ஆக 05, 2025 05:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி அம்பேத்கர் தெரு, தில்லையாடி வள்ளியம்மை தெரு, போகர் சாலை ஆகியவற்றில் நெருக்கமான வீடுகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு 3 தெருக்களும் சந்திக்கும் பகுதியில் மனித மண்டை ஓடு, கைகால் எலும்புகள் இருந்தன. காலையில் இதை பார்த்த பொதுமக்கள் அச்சமடைந்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த போலீசார் எலும்பு, மண்டை ஓட்டினை அப்புறப்படுத்தினர்.
அப்பகுதி மக்கள் கூறுகையில், ' சில நாட்களுக்கு முன் இதே போல் இப்பகுதியில் பொம்மை, எலுமிச்சம்பழம், பூ போன்றவை வைத்து பூஜை செய்யப்பட்டிருந்தது. குப்பை எடுக்கும் நபர்கள் அவற்றை அப்புறப்படுத்தினர். இதுபோன்று அடிக்கடி இப்பகுதியில் நடப்பதால் நடமாடுவதற்கு அச்சம் ஏற்படுகிறது. பேலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் 'என்றனர். அடிவாரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

