/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மந்தகதியில் நடக்கும் ஏரிச்சாலை வளர்ச்சிப்பணிகள் கொடைக்கானல் 2வது வார்டில் தொடரும் அவலம்
/
மந்தகதியில் நடக்கும் ஏரிச்சாலை வளர்ச்சிப்பணிகள் கொடைக்கானல் 2வது வார்டில் தொடரும் அவலம்
மந்தகதியில் நடக்கும் ஏரிச்சாலை வளர்ச்சிப்பணிகள் கொடைக்கானல் 2வது வார்டில் தொடரும் அவலம்
மந்தகதியில் நடக்கும் ஏரிச்சாலை வளர்ச்சிப்பணிகள் கொடைக்கானல் 2வது வார்டில் தொடரும் அவலம்
ADDED : மார் 22, 2025 04:39 AM

கொடைக்கானல்: கொடைக்கானல் 2வது வார்டில் சுற்றுலாத்தலத்தின் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பகுதியாகவும், நகரின் இருதயமாக இருப்பது ஏரியாகும். இந்த வார்டில் கீழ் பூமி, செம்மண்மேடு, ஏரி, கோகுலம் காலனி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.இங்கு நிறைவு பெறாத ஏரிச்சாலை நடை மேடைப் பணி,சேதமடைந்த ரோடு,மழை காலங்களில் சரிந்து விழும் மண்மேடுகள்,காட்டுமாடு, தெரு நாய் பிரச்னை,சீசன் தருணங்களில் தொடரும் போக்குவரத்து நெரிசல்,புதர் மண்டிய ஜிம்கானா நீரூற்று, குடியிருப்புகளில் சுற்றித் திரியும் காட்டுப்பன்றி என உள்ளிட்ட ஏராளமான பிரச்னைகள் உள்ளன.
மண் சரிவால் இடையூறு
ராஜா, எலக்ட்ரிசியன்: அப்சர்வேட்டி செல்லும் மெயின் ரோடு சேதமடைந்து உள்ளது. வாகன ஓட்டிகள் அவதியடையும் நிலை உள்ளது.தெருவிளக்குகள் சரிவர எரியாத நிலை உள்ளது. தெரு நாய், காட்டுமாடு, காட்டுப்பன்றி தொந்தரவுகள் அதிகரித்துள்ளது.
குப்பை தொட்டிகள் இல்லாத நிலையில் ரோட்டோரம் குப்பையை கொட்டி சரிவர அள்ளப்படுவதில்லை. மழை நேரத்தில் அப்சர்வேட்டி ரோட்டில் அடிக்கடி மண் சரிவுகள் ஏற்பட்டு போக்குவரத்து இடையூறாக உள்ளது. கவுன்சிலரிடம் பிரச்சனை குறித்து கூறினாலும் கண்டு கொள்வதில்லை.சீசன் நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் பல மணிநேரம் அவதிக்கு பின்னரே வீடுகளுக்கு திரும்பும் நிலை உள்ளது. வார்டில் சமூக விரோத செயல்களை கண்காணிக்க சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும்.
மழை நீர் தேக்கத்தால் அவதி
பிரபாகரன், தொழிலாளி : கீழ்பூமி குடியிருப்பு பகுதிகளில் வாய்க்கால் வசதியை ஏற்படுத்த வேண்டும். ஏரிச்சாலை வளர்ச்சி பணிகள் மந்தகதியில் நடந்து வருகிறது.
ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் ஏரி சாலையில் ஒழுங்கற்ற ரோடுகளால் மழை நீர் தேங்கி அனைத்து தரப்பினரும் அவதியடைகின்றனர்.
ரேஷன் பொருட்கள் சரி வர வழங்கப்படாமல் தாமதமாக வழங்கும் நிலை உள்ளது.
வார்டில் பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.
வனத்துறை மூலம் நடவடிக்கை
ஜெயசுந்தரம், கவுன்சிலர் (அ.தி.மு.க.,): ரூ. 30 கோடி வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டுள்ளது.
ஏரிச்சாலை வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்த நகராட்சியில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சேதமடைந்த ரோடுகள் விரைவில் புதுப்பிக்கப்படும். தெருவிளக்குகள் இல்லாத பகுதிகளில் விரிவுபடுத்தப்படும்.
காட்டு மாடு,பன்றி தொல்லைகளுக்கு வனத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
தெருநாய் பிரச்னைக்கு தன்னார்வ அமைப்பு மூலம் பேசப்பட்டு வருகிறது. வார்டில் சிசிடிவி கேமரா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பட்டா இல்லாதவர்களுக்கு தற்காலிகமாக வீட்டு வரி வழங்கும் நடவடிக்கை தொடர்கிறது.