/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல் மாநகராட்சி வரி வசூலில் மந்த நிலை; 16 பேருக்கு'மெமோ'
/
திண்டுக்கல் மாநகராட்சி வரி வசூலில் மந்த நிலை; 16 பேருக்கு'மெமோ'
திண்டுக்கல் மாநகராட்சி வரி வசூலில் மந்த நிலை; 16 பேருக்கு'மெமோ'
திண்டுக்கல் மாநகராட்சி வரி வசூலில் மந்த நிலை; 16 பேருக்கு'மெமோ'
ADDED : பிப் 23, 2024 06:06 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் மாநகராட்சியில் குறிப்பிட்ட காலத்திற்குள் வரி,கட்டணம் வசூலிக்காத அலுவலர்கள் 16 பேருக்கு 'மெமோ'வழங்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ள நிலையில் சொத்துவரி, தொழில்வரி, குடிநீர்,பாதாளசாக்கடை கட்டணம் என வசூலிக்கப்படுகிறது. இதற்காக பில் கலெக்டர்கள்,வருவாய் ஆய்வாளர்கள்,உதவி வருவாய் அலுவலர்கள்,குழாய் பொருத்துனர்கள் என தனித்தனியாக அலுவலர்கள் உள்ளனர். வரிகளை ஏராளமானோர் முறையாக செலுத்தாமல் இருந்ததால் மாநகராட்சிக்கு ரூ.கோடிக்கணக்கில் பாக்கி இருந்தது. இதை வசூலிக்க மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவிட்ட நிலையில் ஒரு வாரமாக மாநகராட்சி அலுவலர்கள் தீவிரமாக வரி,கட்டணம் வசூலிக்கும் பணியில் ஈடுபட்டனர். பிப். முடிய சில நாட்களே இருப்பதால் அலுவலர்களும் முடிந்த அளவிற்கு குழுக்கள் அமைத்து ரூ. லட்சக்கணக்கில் வரி வசூலித்தனர்.
இருந்தபோதிலும் குறைவான அளவு வரி,கட்டணம் வசூலித்து அதிக பாக்கி தொகைவைத்திருந்த 5 பில் கலெக்டர்,2 வருவாய் ஆய்வாளர்,4 உதவி வருவாய் அலுவலர்கள்,5 குழாய் பொருத்துனர்கள் என 16 பேருக்கு குற்றப்பத்திரிக்கை குறிப்பாணை( மெமோ ) வழங்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற அலுவர்களும் வரி வசூலில் தீவிரம்காட்டுகின்றனர்.