/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மழையால் சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி
/
மழையால் சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி
ADDED : நவ 25, 2024 04:51 AM

ஒட்டன்சத்திரம் : தொடர் மழை காரணமாக அறுவடைக்கு தயாரான சின்ன வெங்காயம் தரம் குறைந்து கிலோ ரூ.10 க்கு விற்பனை ஆனதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஒட்டன்சத்திரம், காவேரியம்மாபட்டி, தங்கச்சியம்மாபட்டி, அம்பிளிக்கை, ஓடைப்பட்டி, குத்திலுப்பை, எல்லப்பட்டி, வாடிப்பட்டி சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் சின்ன வெங்காயம் அதிகமாக பயிரிடப்படுகிறது. சில நாட்களுக்கு முன் பயிரிடப்பட்டிருந்த சின்ன வெங்காயம் அவ்வப்போது பெய்த மழை காரணமாக பாதிக்கப்பட்டது. அறுவடை செய்யப்பட்ட தரம் குறைந்த சின்ன வெங்காயத்திற்கு மார்க்கெட்டில் நல்ல விலை கிடைக்கவில்லை.
இவ்வகை வெங்காயம் குறைந்த பட்சம் கிலோ ரூ.10 க்கு மட்டுமே விற்றது.
இதேபோல் சில மாதங்களுக்கு முன் அறுவடை செய்யப்பட்ட சின்ன வெங்காயம் மூங்கில் படல்களில் வைத்து பாதுகாக்கப்பட்டு வந்த நிலையில் அவையும் மழை காரணமாக அழுகியதால் விலை குறைந்தது. சின்ன வெங்காயம் மார்க்கெட்டில் குறைந்த விலைக்கு விற்பனை ஆவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.