/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வரத்து குறைவால் விலை உயர்ந்த சின்ன வெங்காயம்; கிலோ ரூ.90க்கு விற்பனை

ADDED : டிச 07, 2024 06:53 AM
திண்டுக்கல்: தொடர்மழையால் வரத்து குறைந்ததால் திண்டுக்கல் வெங்காயப்பேட்டையில் சின்ன வெங்காயத்தின் விலை உயர்ந்து கிலோ ரூ.90க்கு விற்பனையானது.
திண்டுக்கல் மீனாட்சிநாயக்கன்பட்டி அருகே உள்ள வெங்காயப்பேட்டைக்கு கோவை, நாமக்கல், தேனி, திருப்பூர் போன்ற பல்வேறு மாவட்டங்களிலிருந்து தினமும் 300 டன்னிற்கு அதிகமாக சின்ன வெங்காயம் மூடை மூடையாக விற்பனைக்கு வருகிறது. பல பகுதிகளில் பெஞ்சல் புயல் காரணமாக கனமழை பெய்தது. இதனால் சின்ன வெங்காயத்தின் உற்பத்தி குறைந்தது. இதையடுத்து நேற்று திண்டுக்கல் வெங்காயப்பேட்டைக்கு வர வேண்டிய 300 டன் பாதியாக குறைந்து 150 டன் மட்டுமே வந்தது. வரத்து பாதியாக குறைந்ததால் ஒரு வாரமாக கிலோ ரூ.35க்கு விற்பனையான சின்ன வெங்காயம் நேற்று ரூ.90 க்கு விற்பனை செய்யப்பட்டது.
விலை அதிகரித்த சின்னவெங்காயத்தை வாங்க சில்லறை வியாபாரிகள் தயக்கம் காட்டினர். இன்னும் ஓரிரு நாட்கள் இதேநிலை தான் தொடரும். வரத்து அதிகமானதும் விலை குறைந்துவிடும் என வெங்காயப்பேட்டை வியாபாரிகள் தெரிவித்தனர்.