UPDATED : செப் 16, 2026 06:12 PM
ADDED : செப் 16, 2026 04:03 PM

அ நிறம் | அளவு
நத்தம்:நத்தம் அருகே பன்னியாமலையை சேர்ந்தவர் பிரதீபா.
இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக தோட்டம் உள்ளது. நேற்று இந்த தோட்டத்தில் உள்ள கிணற்றில் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு தவறி விழுந்து தவித்தது. தகவல் அறிந்த நத்தம் தீயணைப்பு நிலைய உதவி அலுவலர் அம்சராஜன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சென்று கிணற்றுக்குள் இறங்கி பாம்பை பாதுகாப்பாக மீட்டனர். பின்னர் வனத்துறையினரிடம் ஒப்படைக்கபட்ட பாம்பு அருகில் உள்ள வனப்பகுதியில் விடப்பட்டது.
