தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ விதிமுறை மீறும் வைக்கோல் வாகனங்களுக்கு எச்சரிக்கை

விதிமுறை மீறும் வைக்கோல் வாகனங்களுக்கு எச்சரிக்கை

விதிமுறை மீறும் வைக்கோல் வாகனங்களுக்கு எச்சரிக்கை


UPDATED : செப் 16, 2026 06:20 PM

ADDED : செப் 16, 2026 03:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 16, 2026 06:20 PM ADDED : செப் 16, 2026 03:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வடமதுரை:திண்டுக்கல் மாவட்டத்தில் வைக்கோல் ஏற்றி செல்லும் வாகனங்கள் மோட்டார் வாகன விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

கால்நடைகளின் தேவைக்கு விற்பனை செய்வதற்காக குக்கிராமங்களுக்குள் வைக்கோல் ஏற்றிய லாரி, மினிலாரிகள், வேன்கள் செல்லும்போது மின்ஒயர்களில் உரசி தீ விபத்துகள் ஏற்படுகின்றன.

இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், 'தமிழ்நாடு மோட்டார் வாகன விதி 396ன்படி வாகனத்தின் உயர அளவு தரையிலிருந்து வாகனத்தின் ஏற்பட்டுள்ள சரக்கின் உயரம் 3.8 மீட்டர் உயரம் மட்டுமே அனுமதிக்கப்படும். வைக்கோல்களை வாகனங்களில் ஏற்றும்போது அனுமதிக்கப்பட்ட உயரத்தை பின்பற்ற வேண்டும். வைக்கோலை பண்டில் போல் சுற்றி ஏற்ற வேண்டும். இதர பாதுகாப்பு அம்சங்களான சிகப்பு பிரதிபலிக்கும் பட்டைகள், பிரேக் லைட், முகப்பு விளக்கு அனைத்தும் சரியான முறையில் இயங்குகிறதா என்பதை உறுதி செய்து வாகனங்களை இயக்க வேண்டும்' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us