/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வீடுகளுக்குள் புகும் பாம்பு; சாக்கடை இன்றி தொற்று: சிரமத்தில் மல்லிகை நகர் குடியிருப்போர்

ADDED : மே 29, 2025 02:01 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் மல்லிகை நகரில் மண்டி கிடக்கும் புதர்களால் வீடுகளுக்குள் புகும் பாம்புகள், சாக்கடை இல்லாததால் நோய் பரவும் அச்சம், ரோடு வசதி இல்லாமல் அவதி என பல்வேறு இன்னல்களுக்கு இப்பகுதி மக்கள் ஆளாகி வருகின்றனர்.மல்லிகை நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் அழகர்சாமி, செயலாளர் ரமேஷ்குமார், பொருளாளர் சேதுராமன், உறுப்பினர் விஜயலட்சுமி கூறியதாவது: மல்லிகை நகர் தெருக்களில் குப்பை சேகரிக்க வருவது கிடையாது.
மின்கம்பங்களில் சிறிய பல்புகளே உள்ளன. அவை அடிக்கடி பழுதாகுவதால் இரவில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. வாரம் ஒரு முறை மட்டுமே அதுவும் ஒரு மணி நேரமே குடிநீர் வருகிறது. அனைவரும் ஆழ்குழாய் தண்ணீரை நம்பி உள்ளனர். குடிப்பதற்கு தண்ணீர் விலை கொடுத்து வாங்கும் நிலை உள்ளது. சாக்கடை இல்லாமல் வீடு பகுதியில் குழிகள், செப்டிக் டேங்க் அமைத்து கழிவுநீரை விடுகின்றனர். சில இடங்களில் கழிவுநீர் ரோடுகளில் வழிந்தோடுகிறது. இதனால் தொற்று நோய் அபாயம், கொசு தொல்லை உள்ளது.
காலி இடங்களில் புதர்கள் மண்டி கிடப்பதால் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. இவை அவ்வப்போது வீடுகளுக்குள் படையெடுக்கின்றன.
தெருக்களில் நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால் குழந்தைகள் அச்சத்தில் உள்ளனர். 1, 2, 3, 4 என நான்கு தெருக்களில் ரோடு இல்லாமல் உள்ளது. மல்லிகை நகர் பகுதியில் வீடுகளுக்கு கதவு எண்ணே வழங்கவில்லை. தபால், கூரியர் சேவை ஊழியர்கள் அலைபேசி எண்களில் அழைத்தே தபால்கள், பொருட்களை வழங்குகின்றனர் என்றார்.