/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குதறுகிறது...கடிக்கிறது...மிரட்டுகிறது திணறும் திண்டுக்கல் 10 வது வார்டு மக்கள்
/
குதறுகிறது...கடிக்கிறது...மிரட்டுகிறது திணறும் திண்டுக்கல் 10 வது வார்டு மக்கள்
குதறுகிறது...கடிக்கிறது...மிரட்டுகிறது திணறும் திண்டுக்கல் 10 வது வார்டு மக்கள்
குதறுகிறது...கடிக்கிறது...மிரட்டுகிறது திணறும் திண்டுக்கல் 10 வது வார்டு மக்கள்
ADDED : செப் 29, 2024 06:31 AM

திண்டுக்கல், : ஆண்டுக்கணக்கில் சீரமைக்கப்படாத சாக்கடைகளால் கழிவு நீர் தேங்க கொசுக்கள் உற்பத்தி, வீதியெங்கும் நாய்கள் தொல்லை, தெருவிகளக்குள் இன்றி இருள் என திண்டுக்கல் மாநகராட்சி 10 வது வார்டு மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
செல்லாண்டியம்மன் கோயில் தெருக்கள் 1,2,3, வடக்குத் தெரு, சின்ன அய்யன்குளம் உள்ளிட்ட பகுதிகளைக் கொண்ட பகுதி வார்டில் சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சீரமைக்காததால் எந்நேரமும் கழிவு நீர் தேங்குகிறது. கொசு உற்பத்தியாகி நோய்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. சின்ன அய்யன்குளம் பகுதியில் எந்தவித அடிப்படை வசதிகளுமே இல்லை. தண்ணீர் கூட விலை கொடுத்து வாங்கும் சூழல் தான் நிலவுகிறது. இப்பகுதிக்கு செல்லும் வழித்தடம் கூட முறையாக இல்லை. இப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் குப்பை , துர்நாற்றம் மத்தியில் செயல்பட்டு வருகிறது. குளத்தையொட்டிய பகுதி என்பதால் நோய்தொற்று ஏற்படும் சூழல் நிலவுகிறது. இப்பகுதியில் உள்ள லாரிபேட்டை இரவு நேரங்களில் மதுப்பிரியர்களின் கூடாரமாக விளங்குறது. தெருக்களில் நாய்கள் சுற்றித்திரிகின்றன. அவை வீட்டிற்குள் செல்வதும், குழந்தைகளை கடித்து விடுவதும் வாடிக்கையாகி வருகிறது.போதிய வெளிச்சமின்மையால் இரவு நேரத்தில் என்ன நடக்கிறது என்பதே தெரியாத சூழல் உள்ளது. சமீபத்தில் இங்கு அடுத்தடுத்த கொலைகள் நடந்ததும் குறிப்பிடத்தக்கது. போதிய சி.சி.டி.வி., கேமராக்கள் இல்லாததும் இந்த குற்றச்சம்பவங்களுக்கு காரணமாக அமைகிறது.
தண்ணீர் பிரச்னை
சின்னக்காமு, இல்லத்தரசி, சின்ன அய்யன்குளம்: தண்ணீர் பிரச்னை அதிகமாக உள்ளது. மாநகராட்சி தண்ணீர் வண்டி வந்தாலும் பெரும்பாலும் விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழல் நிலவுகிறது. எங்கள் தெருவுக்கு வரும் பகுதி மிகவும் மோசமாக இருக்கிறது. சரி செய்து உரிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.
பாதுகாப்பில்லாத சூழல்
வேல்முருகன், லாரிபேட்டை ரோடு : வார்டு பாதுகாப்பில்லாத சூழலில் இருக்கிறது. மாலைக்குமேல் சில ஒதுக்குப்புறமான இடங்களில் சிறுவர்கள் வரை கஞ்சா போன்ற போதை வஸ்துக்களை பயன்படுத்துகின்றனர். அவர்களுக்குள் அடித்துக் கொள்கின்றனர். பொதுமக்கள், பெண்கள் அச்சப்படுகின்றனர். கொலை சம்பவங்களும் அவ்வப்போது நிலவுகிறது. உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர வேண்டும்.
கொசு , நாய்கள் தொல்லை
நாகேந்திரன், செல்லாண்டியம்மன் கோயில் 2 வது தெரு : கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் அச்சத்தோடு கடந்து வர வேண்டியதாக இருக்கிறது. மாதக்கணக்கில் சேதமான சாக்கடைகளால் நோய்தொற்று பரவுகிறது. துார்வாரினாலும் கழிவுகளை வெளியே எடுத்து போட்டு விட்டு அப்படியே விட்டு விடுகின்றனர். இதில் துார்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று சூழல் நிலவுகிறது.
வாகனங்கள் மூலம் குடிநீர் சப்ளை
பானுப்பரியா, கவுன்சிலர், (தி.மு.க.,) : தண்ணீர் தொடர்ந்து வாகனங்கள் மூலம் விநியோகம் செய்து கொண்டிருக்கிறோம். குழாய் அமைக்கவும் தொடர்ந்து வலியுறுத்தி அதற்கான பணிகளையும் மேற்கொள்ளப்படும். அங்கன்வாடி மையம் அமைக்க திட்டமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. நிதி வந்ததும் புதிய அங்கன்வாடி அமைக்கப்படும் என்றார்.