UPDATED : செப் 29, 2026 07:26 PM
ADDED : செப் 29, 2026 07:21 PM
அ நிறம் | அளவு
கொடைக்கானல்:கொடைக்கானலில் நிலவிய ரம்யமான சீதோஷ்ண நிலையை சுற்றுலா பயணிகள் ரசித்தனர்.
குளு, குளு நகரான கொடைக்கானலில் சில வாரங்களாக சுட்டெரிக்கும் வெயில் நீடித்தது. கடந்த வாரம் மிதமான மழை பெய்தது. பள்ளி காலாண்டு விடுமுறை காரணமாக ஏராளமான பயணிகள் குவிந்தனர்.
நேற்று காலை முதலே நகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காற்றில் ஈரப்பதம் அதிகரித்து லேசான குளிர் நிலவியது. மதியத்திற்கு பின் இதமான சீதோஷ்ண நிலையால் சுற்றுலா பயணிகள் அங்குள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர்.
ஏரியில் படகு சவாரியும், ஏரிச்சாலையில் குதிரை, சைக்கிள் சவாரி செய்தும் மகிழ்ந்தனர். மாலையில் நகரை பனிமூட்டம் சூழ்ந்தது. வழக்கத்திற்கு மாறான இத்தகைய சூழல் பயணிகளை வெகுவாக கவர்ந்தது.
