/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல், சிறுமலையில் பனிப்பொழிவு
/
திண்டுக்கல், சிறுமலையில் பனிப்பொழிவு
ADDED : நவ 22, 2024 04:56 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் சிறுமலையில் நேற்று காலை முதல் பனிமூட்டம் அதிகரித்த நிலையில் குளிரும் மக்களை வாட்டி வதைத்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்கை முடங்கி வீடுகளுக்குள்ளே முடங்கினர்.
திண்டுக்கல் சிறுமலையில் நேற்று காலை முதல் முன்னால் போகும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனி மூட்டமாக காணப்பப்பட்டது. இதனால் கார்கள்,டூவீலர்கள் தங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி பயணித்தனர்.
லேசான சாரல் மழையும் பெய்ததால் வழக்கத்தை விட குளிர் அதிகளவில் இருந்தது. இதனால் அங்குள்ள மக்கள் குளிர் தாங்க முடியாமல் நடுங்கும் நிலை ஏற்பட்டது. தொடர்ந்து வெளியில் வராமல் இயல்பு வாழ்க்கை முடங்கி தங்கள் வீடுகளுக்குள்ளே குளிரை கட்டுப்படுத்தும் ஆடைகள் அணிந்தபடி இருந்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்து இருந்தது.
இரவு வரை அதே நிலை நீடித்ததால் சிறுமலை முழுவதும் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி இருந்தது. இதேபோல் திண்டுக்கல் நகரிலும் பனிமூட்டம் அதிகளவில் இருந்தது.