/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தேர்தல் விதிகளில் சமூக வலைதளங்கள் கண்காணிப்பு
/
தேர்தல் விதிகளில் சமூக வலைதளங்கள் கண்காணிப்பு
ADDED : மார் 20, 2024 12:26 AM
திண்டுக்கல் : தேர்தல் நடத்தை விதிகள் அமலான நிலையில் சமூக வலைதள பக்கங்களை கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலாகி உள்ளன. அரசியல் கட்சியினரும் தேர்தலுக்கு சமூக வலைதளங்களை பிரதானமாக பயன்படுத்தி பிரசாரம் மேற்கொள்ள தொடங்கி விட்டனர். இந்நிலையில் சமூக வலைதளங்களான முகநுால், இன்ஸ்டாகிராம், எக்ஸ் தளம் உட்பட அனைத்து சமூக வலைதளங்களும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. வெறுப்புப்புணர்ச்சியை துாண்டுதல், குறியீடு சார்ந்தவை, தனி மனித விமர்சனங்கள் போன்றவை சார்ந்த கருத்துகள் பதிவிடுதல், வெறுப்பு கலந்த உருவ கேலி படங்கள், காட்சிகள், உண்மைக்கு புறம்பான தகவல்கள் போன்றவை பரப்பப்படுகிறதா என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் கண்காணிக்கப்படுகிறது.
அதோடு ஊடகங்கள், யூடியூப்கள் போன்றவையும் தொடர்ந்து கண்காணிக்கபடுவதோடு அனைத்தும் பதிவு செய்யப்படுகின்றன.
இந்த பணியினை செய்தி மக்கள் தொடர்புத்துறையினர் செய்து வருகின்றனர். ஏதேனும் இது போன்ற விவரங்கள் இனம் காணப்பட்டால் சம்மந்தப்பட்ட பதிவுகள் மீது போலீசார் வாயிலாகவும், நிறுவனம் சார்ந்தவை என்றால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் விளக்கம் கேட்கவும் ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

