ADDED : செப் 29, 2026 08:54 PM
அ நிறம் | அளவு
பழநி, செப்.30-
பழநி நகரில் உள்ள சமுதாயக் கூடத்தில் சமூக நலத்துறை சார்பில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
எம்.எல்.ஏ., ரவிமனோகரன் தலைமை வகித்தார். 200 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. ஊட்டச்சத்து உணவுகள் குறித்த கண்காட்சி நடந்தது. குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பூங்கோதை, வட்டார மருத்துவ அலுவலர் வருண் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.
