ADDED : ஜூலை 24, 2025 04:55 AM
ஆயக்குடி: பழநி ஆயக்குடி பகுதியில் யானைகள் வழித்தடங்கள் அடைக்கப்பட்டு அனுமதியின்றி அமைக்கப்பட்ட சோலார் மின் வேலிகளால் வனப்பகுதிக்குள் செல்ல முடியாது யானைகள் சுற்றி வருவதால் விளை நிலங்களில் சேதம் அதிகரித்து வருவது வனத்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது.
பழநி ஆயக்குடி மேற்கு தொடர்ச்சி மலை அருகே காட்டு யானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து சேதம் ஏற்படுத்துகிறது. நேற்று முன்தினம் இரவு தொரமடை ஓடை பகுதியில் கருப்புசாமி தோட்டத்தில் புகுந்த காட்டு யானைகள் 30-க்கு மேற்பட்ட தென்னை, வாழை மரங்களை சேதப்படுத்தின.
இதை தொடர்ந்து ஒட்டன்சத்திரம் வனச்சரக வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு செய்தனர்.வனத்துறையினர் கூறுகையில்,''வனப்பகுதிக்குள் செல்லும் யானை வழித்தடங்களில் விவசாயிகள் சிலர் தங்கள் விளை பொருட்களையும் ,விளைநிலங்களையும் பாதுகாக்க சோலார் வேலி அமைத்துள்ளனர். இதனால் யானைகள் குழப்பமடைந்து மீண்டும் விளைநிலங்களுக்குள் புகுந்து வருகிறது. இதோடு அப்பகுதியிலே சுற்றி திரிகிறது.
இதனால் விளை பொருட்களின் சேதம் அதிகரித்து வருகிறது. யானை வழித்தடங்களில் அனுமதி இன்றி அமைந்துள்ள சோலார் வேலிகளை அகற்ற விவசாயிகள் முன் வர வேண்டும்.