/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நுாலக வாசல் சிரமத்திற்கு தீர்வு
/
நுாலக வாசல் சிரமத்திற்கு தீர்வு
ADDED : ஜூலை 20, 2025 04:59 AM

வடமதுரை: வடமதுரை கிளை நுாலக வாசல் பகுதியில் வாசகர்களை பெரும் சிரமத்திற்குள்ளாகிய பிரச்னைக்கு தினமலர் செய்தி எதிரொலியாக உடனடியாக தீர்வு கிடைத்தது.
வடமதுரை காணப்பாடி ரோட்டில் அரசின் கிளை நுாலகம் செயல்படுகிறது. இதன் வாசல் பகுதியில் கழிவு நீர் வடிகால் கட்டமைப்பிற்கு மூடி இல்லாமல் வாசகர்கள் மிகுந்த சிரமத்துடனும் எச்சரிக்கையுடனும் நுாலகத்திற்கு சென்று திரும்பும் நிலை இருந்தது. பலரும் கால் தடுமாறி சாக்கடையில் இறங்கி அவதியுறும் நிலையும் இருந்து வந்தது.
இதுகுறித்து நேற்று தினமலர் நாளிதழ் இன் பாக்ஸ்' பகுதியில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து இப்பிரச்னையில் கவனம் செலுத்திய வடமதுரை பேரூராட்சி நிர்வாகம் நுாலகத்தில் வாசல் பகுதியில் இருக்கும் சாக்கடை மீது சிமென்ட் பலகைகளை கொண்டு மூடி அமைத்துள்ளது.