/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தாயுடன் பேசிய உறவினரது விரல்களை வெட்டிய மகன்
/
தாயுடன் பேசிய உறவினரது விரல்களை வெட்டிய மகன்
ADDED : ஜூன் 15, 2025 05:39 AM
வடமதுரை : தென்னம்பட்டியில் தாயுடன் பேசிய உறவினரின் கை விரல்களை வெட்டி துண்டாக்கிய மகனை போலீசார் கைது செய்தனர்.
தென்னம்பட்டி இந்திரா நகர் முனியாண்டி இரு ஆண்டுகளுக்கு முன் இறந்த நிலையில் உறவினரான சங்கர் 42, முனியாண்டியின் மனைவியுடன் அவ்வப்போது பேசி வந்தார். இது முனியாண்டியின் 20 வயது மகன் கவுதமுக்கு பிடிக்கவில்லை. மே மாதம் ஏற்பட்ட தகராறில் சங்கர் தாக்கப்பட்டு தலையில் காயம் அடைந்தார்.
இந்நிலையில் நேற்று காலை சங்கருடன் தகராறு செய்த கவுதம் அரிவாளால் வெட்டியதில் அவரின் கைவிரல்கள் துண்டானது. சங்கரை மீட்ட உறவினர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். கவுதமை வடமதுரை போலீசார் கைது செய்தனர்.