/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தாய் கண்ணெதிரே மகன் விபத்தில் பலி
/
தாய் கண்ணெதிரே மகன் விபத்தில் பலி
ADDED : அக் 20, 2024 01:38 AM

பழனி,:திண்டுக்கல் மாவட்டம், பழனி, பெரியப்பா நகரை சேர்ந்தவர் குமரேசன். இவரது மனைவி யமுனா, 32; தனியார் பள்ளி ஆசிரியர்.
இவர்களது மகன் யோகேஷ் பாண்டியன், 12; ஏழாம் வகுப்பு மாணவர். யமுனா தனது டூ - வீலரில் ஹெல்மெட் அணியாமல் மகனுடன் பள்ளிக்கு சென்றார்.
பழனி- - உடுமலை சாலையில், கன்டெய்னர் லாரியை யமுனா முந்த முயன்றார். அப்போது, எதிரே பெருமாள்புதுாரை சேர்ந்த சங்கர்குரு, 32, ஓட்டி வந்த டூ - வீலர் மோதியதில், யோகேஷ் பாண்டியன் கன்டெய்னர் லாரியின் பின் டயரில் சிக்கி, உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தன் கண் எதிரே மகன் இறந்ததை கண்டு, யமுனா கதறி துடித்தார்.
பலத்த காயமடைந்த யமுனா, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.