/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குடிக்க பணம் தராததால் தந்தையை வெட்டிய மகன்
/
குடிக்க பணம் தராததால் தந்தையை வெட்டிய மகன்
ADDED : அக் 12, 2025 05:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாடிக்கொம்பு : தாடிக்கொம்பு உலகம்பட்டி மேல்கரை புதுரை சேர்ந்தவர் குடிநீர் தொட்டி ஆப்பரேட்டர் ராமன் 57.மனைவி பேச்சியம்மாள். இவரது மகன் ராஜா அதே ஊரில் குடும்பத்துடன் தனியாக வசித்து வருகிறார்.
மதுரை இளநீர் கடையில் வேலை பார்த்து வந்த ராஜா வேலைக்கு செல்லாமல் மது போதைக்கு அடிமையானார். தாய் பேச்சியம்மாளிடம் குடிக்க பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். இதை ராமன் தட்டிக்கேட்டார் கோபமடைந்த ராஜா தந்தையை அடித்து கீழே தள்ளி அரிவாளால் வெட்டினார். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தாடிக்கொம்பு எஸ்.ஐ., சூரியகலா விசாரிக்கிறார்.