/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திருப்பூர், கோவைக்கு சிறப்பு பஸ்கள்
/
திருப்பூர், கோவைக்கு சிறப்பு பஸ்கள்
ADDED : நவ 30, 2024 05:42 AM
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரத்தில் இருந்து திருப்பூர், கோவைக்கு ஞாயிறு , விழாக்காலங்களில் சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டுமென திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அசோசியேஷன் தலைவர் சுரேஷ்குமார் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ஒட்டன்சத்திரம் கிளை மேலாளரிடம் மனு கொடுத்துள்ளார்.
அதில்,ஒட்டன்சத்திரத்தில் இருந்து திருப்பூர், கோவைக்கு செல்லும் மாணவர்கள், ஐ.டி., யில் பணிபுரிவோர் திண்டுக்கல், மதுரை ,தேனி வழித்தடங்களிலிருந்து வரும் பஸ்களில் பயணம் செய்யும் நிலை உள்ளது.
ஞாயிறு, விழாக் காலங்களில் ஒட்டன்சத்திரம் வருவதற்கு முன்பே மேற்கண்ட பஸ்களில் கூட்டம் நிரம்பி விடுகிறது. இதனால் ஒட்டன்சத்திரம் பகுதியில் இருந்து பயணிப்போர் பஸ்களில் நின்று கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஒட்டன்சத்திரம் பகுதி மக்கள் பயன்படும் வகையில் ஞாயிறு, விழாக்காலங்களில் ஒட்டன்சத்திரத்தில் இருந்து கோவை திருப்பூருக்கு சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும்.
பொருளாளர் கோபி, செயலாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட அமைப்பாளர் சரவணசாமி, செயற்குழு உறுப்பினர் பழனிகுமார் உடன் இருந்தனர்.