ADDED : அக் 28, 2025 04:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: அய்யலுார் பேரூராட்சியில் கோடாங்கிசின்னான்பட்டி, தீத்தாகிழவனுார், தங்கம்மாபட்டி, கருஞ்சின்னானுார், கருவார்பட்டி வார்டுகளில் சிறப்பு கூட்டங்கள் நடந்தன. பேரூராட்சி தலைவர் கருப்பன், கவுன்சிலர்கள் தனலட்சுமி, நித்யா, மாலா பங்கேற்றனர்.
மக்கள் தெரிவித்து கருத்துகள், குறைகளை இளநிலை உதவியாளர் அல்லமுத்து, பதிவறை எழுத்தர் மோகன் பதிவு செய்தனர். இன்று 5, நாளை 5 வார்டுகளில் இந்த சிறப்பு கூட்டங்கள் நடக்கிறது. இவற்றில் முன்னுரிமை பெற்ற விஷயங்கள் பேரூராட்சி உதவி இயக்குனர் அலுவலகம் மூலம் முதல்வரின் முகவரி துறைக்கு அனுப்பபட உள்ளது.

