/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திருப்பதி பஸ்சுக்கு சிறப்பு பூஜை
/
திருப்பதி பஸ்சுக்கு சிறப்பு பூஜை
ADDED : ஏப் 15, 2025 07:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி வந்த திருப்பதி பஸ்சுக்கு சிறப்பு பூஜை செய்து துவங்கி வைத்தனர்.
பழநிக்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் வந்தபோது பழநி-யிலிருந்து திருப்பதிக்கு இயக்க கந்தனருள் அறக்கட்டளை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதன்படி ஏப்.3 ல் பழநி - திருப்பதி பஸ் சேவை ஆந்திராவில் துவக்கி வைக்கப்பட்டது. நேற்று பழநியில் இருந்து திருப்பதி நோக்கி செல்ல இருந்த பஸ்சுக்கு சிறப்பு பூஜை செய்து துவங்கி வைத்தனர்.
இதில் அறக்கட்டளை நிர்வாகிகள் அனந்தசுப்பிரமணியம், சுந்தரம், நேரு, சங்கராலயம் சிவக்குமார் கலந்து கொண்டனர்.