/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி தைப்பூச விழாவிற்கு சிறப்பு ரயில்கள்; திருச்சி வழியாக சென்னைக்கு இயக்கலாமே
/
பழநி தைப்பூச விழாவிற்கு சிறப்பு ரயில்கள்; திருச்சி வழியாக சென்னைக்கு இயக்கலாமே
பழநி தைப்பூச விழாவிற்கு சிறப்பு ரயில்கள்; திருச்சி வழியாக சென்னைக்கு இயக்கலாமே
பழநி தைப்பூச விழாவிற்கு சிறப்பு ரயில்கள்; திருச்சி வழியாக சென்னைக்கு இயக்கலாமே
ADDED : ஜன 15, 2024 11:36 PM

திண்டுக்கல்- பாலக்காடு மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகல பாதையாக மாற்றும் பணி 2009ல் தொடங்கப்பட்டது. அகல பாதை முன் இந்த பாதையில் ராமேஸ்வரம்- கோயம்புத்துார், தூத்துக்குடி -கோயம்புத்துார், மதுரை -கோவை இன்டர்சிட்டி, திண்டுக்கல்- கோவை, பழநி, திண்டுக்கல் -வழியாக கேரளாவில் இருந்து சில ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது.
திண்டுக்கல்,ஒட்டன்சத்திரம், பழநி சுற்றிய கிராம மக்கள் கோவைக்கு கல்வி, வேலை, பிற அலுவல் பணிக்காக சென்று வந்தனர். இந்த பகுதியில் இருந்து மதுரைக்கும் செல்வது எளிதாக இருந்ததால் மக்களுக்கு பெரும் பயனுள்ளதாக இருந்தது. இந்தரயில்கள் அகலப்பாதை பணிக்காக 2009 ல் நிறுத்தப்பட்டன.
பணிகள் முடிவுற்று முதல் கட்டமாக 2012 நவம்பரில் அகலபாதையில் திண்டுக்கல் பழநி ரயில் போக்குவரத்து தொடங்கியது. இதை தொடர்ந்து 2014ல் பழநி- பொள்ளாச்சி ரயில் பாதை பணிகள் முடிக்கப்பட்டது. இறுதியாக பொள்ளாச்சி- போத்தனுார் மீட்டர் கேஜ் பாதை அகல பாதையாக மாற்றம் செய்யப்பட்டு 2017ல் போக்குவரத்து தொடங்கியது. போக்குவரத்து தொடங்கி ஆறு ஆண்டுகள் ஆகியும் இந்த அகலப்பாதையில் குறைவான ரயில்களே இயக்கப்படுகிறது.
தற்போது திண்டுக்கல்லில் இருந்து கோவை மார்க்கத்திற்கு ஒரு ரயிலும் பாலக்காடு மார்க்கத்தில் 3 ரயில்களும் இயங்குகின்றன. அகல ரயில் பாதையில் இன்னும் கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். தைப்பூசம் உள்ளிட்ட திருவிழா நாட்கள், பண்டிகை நாட்களிலாவது பழநியிலிருந்து திருச்சி வழியாக சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்குவதோடு, மீட்டர் கேஜ்பாதையாக இருந்த போது இயக்கப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.