/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கோயில்களில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு
/
கோயில்களில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு
ADDED : செப் 08, 2025 06:08 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கோயில்கள் பவுர்ணமி சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில், கோட்டை மாரியம்மன் கோயில், பத்ரகாளியம்மன் கோயில், பழநி ரோடு காளியம்மன் கோயில், ஆர்.எம்.,காலனி வெக்காளியம்மன் உள்பட பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. ஆவணி மாத பவுர்ணமி என்பதால் சிறப்பு விளக்கு பூஜை, சிறப்பு அலங்கார ஆராதனைகள் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
கன்னிவாடி : தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில், சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக, மூலவருக்கு சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து, மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் திருவிளக்கு வழிபாடு நடத்தினர்.
அக்கரைப்பட்டி சடையாண்டி கோயில், குட்டத்துப்பட்டி பிச்சை சித்தர் கோயிலில், பவுர்ணமி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.