ADDED : ஜூன் 24, 2026 01:47 AM

அ நிறம் | அளவு
திண்டுக்கல்: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் அறிவுத்திருக்கோயிலில் சிறப்பு யோகா பயிற்சி நடந்தது. நிர்வாக அறங்காவலர் தாமோதரன் தலைமை வகித்தார்.
முதுநிலை பேராசிரியர் நளினி, பேராசிரியர் கண்ணன் முன்னிலை வகித்தனர். ஆசிரியர்கள் சரவணன், சீதாராமன், சங்கரேஸ்வரி, பிரசாந்தி ஆகியோர் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், மருத்துவமனை, பல்கலைகளை சேர்ந்த 6200 பேருக்கு மனவளக்கலை யோகா பயிற்சி அளித்தனர்.
