ADDED : ஜூன் 24, 2026 01:47 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட சி.ஐ.டி.யு., டாஸ்மாக் ஊழியர் சங்கம் சார்பில் மணிக்கூண்டு அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் சம்மேளன மாநில துணைப்பொதுச்செயலாளர் ஜான் ராதாகிருஷ்ணன் சஸ்பெண்டை கண்டிப்பது, டாஸ்மாக் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு நடப்பு சட்டசபை கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்திற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
மாவட்ட தலைவர் மகாமுனி தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் ஜெயசீலன், மாநிலக்குழு உறுப்பினர் கோபால், மாவட்ட செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் பேசினர்.
