ADDED : செப் 05, 2026 05:00 PM
அ நிறம் | அளவு
வேடசந்துார், செப்.6
உலக தண்டுவட பாதிப்பு தினத்தை முன்னிட்டு வேடசந்துார் ஆத்துமேடு பகுதியில் விபத்துக்களில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் விழிப்புணர்வு நடந்தது. மாவட்ட பொறுப்பாளர் செல்வகுமார் தலைமை வகித்தார். அப்போது தலைக்கவசம் உயிர்க்கவசம், சீட் பெல்ட் அணியவும், அதிவேகம் ஆபத்தானது, மது அருந்தி விட்டு வாகனத்தை ஓட்டாதீர், ஒரு நொடி விபத்து வாழ்நாள் பாதிப்பு, வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசுவதை தவிர்க்கவும் உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
