ADDED : செப் 19, 2026 03:06 AM

அ நிறம் | அளவு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதல்வர் கோப்பைக்கான கல்லுாரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற கபடி, வாலிபால் போட்டிகள் நடந்தன. ஆண்கள் பிரிவு கபடி போட்டியில் ஜி.டி.என்., கலை அறிவியல் கல்லுாரி அணி முதலிடம் பெற்றது. காந்திகிராம பல்கலை அணி 2ம் இடம் பெற்றது.
பெண்கள் பிரிவு வாலிபால் போட்டியில் போன் செக்யூர் கல்லுாரி அணி முதலிடம் பெற்றது. திண்டுக்கல் எம்.வி.எம்., மகளிர் கலை அறிவியல் கல்லுாரி அணி 2ம் இடம் பெற்றது. ஆண்கள் பிரிவு கால்பந்து போட்டிகள் பகலிரவு போட்டிகளாக நடந்தது. ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டுத்துறை அலுவலர் சிவா செய்திருந்தார்.
