/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல் அச்யுதா பப்ளிக் பள்ளியில் விளையாட்டு விழா
/
திண்டுக்கல் அச்யுதா பப்ளிக் பள்ளியில் விளையாட்டு விழா
திண்டுக்கல் அச்யுதா பப்ளிக் பள்ளியில் விளையாட்டு விழா
திண்டுக்கல் அச்யுதா பப்ளிக் பள்ளியில் விளையாட்டு விழா
ADDED : நவ 10, 2024 05:07 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் அச்யுதா பப்ளிக் பள்ளியில் 10 வது ஆண்டு விளையாட்டு விழா நடைப்பெற்றது .பள்ளி செயலாளர் மங்களராம் விருந்தினராகக் கலந்து கொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
11ம் வகுப்பு மாணவி கிருத்திகா வரவேற்றார். பள்ளி செயலாளர்கள் மங்களராம், காயத்திரி மங்களராம் புறாக்களை பறக்க விட்டு போட்டிகளைத் துவக்கி வைத்தனர். முதன்மை முதல்வர் சந்திர சேகரன் கொடியேற்றினார். 6ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பல்வேறு தடகளப் போட்டிகள் நடைபெற்றன.
விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற 3600 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்களை டோபாஸ், ரூபி, சபையர், எம்ரால்டு என 4 அணிகளாக பிரித்ததில் சிறந்த அலங்காரம் செய்த முதல் அணியாக ரூபி அணியும், 2வது சபையர் அணியும் இடம்பெற்றன.
பெரும்பாலான போட்டிகளில் வெற்றி பெற்ற டோபாஸ் அணி ஒட்டு மொத்த சாம்பியன் கோப்பை வென்றது.
ரூபி அணி 2ம் இடம் பெற்றது.இறுதியாக 9ம் வகுப்பு மாணவிகள் தீப்ஷிதா, மோனிசா நன்றி கூறினர்.
ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் ஞானப்பிரியதர்ஷினி, வித்யா, மணிமேகலை, பிரபா, பத்மநாபன், ராஜசுலோக்சனா, பிரசாத் சக்கரவர்த்தி, கார்த்திக், மேலாளர் பிரபாகரன், ஜான் கிரிஸ்டோபர், ராஜசேகர், ஜெகதீசன் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பங்கேற்றனர்.