/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஸ்ரீமதி கோப்பை கிரிக்கெட் லீக் போட்டி டி.சி.ஏ.,உமன்ஸ் விங்ஸ் அணி வெற்றி
/
ஸ்ரீமதி கோப்பை கிரிக்கெட் லீக் போட்டி டி.சி.ஏ.,உமன்ஸ் விங்ஸ் அணி வெற்றி
ஸ்ரீமதி கோப்பை கிரிக்கெட் லீக் போட்டி டி.சி.ஏ.,உமன்ஸ் விங்ஸ் அணி வெற்றி
ஸ்ரீமதி கோப்பை கிரிக்கெட் லீக் போட்டி டி.சி.ஏ.,உமன்ஸ் விங்ஸ் அணி வெற்றி
ADDED : ஜன 08, 2024 05:04 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் நடந்த 16 வயதுக்குட்பட்டோருக்கான ஸ்ரீமதி கோப்பைக்கான கிரிக்கெட் லீக் போட்டியில் திண்டுக்கல் டி.சி.ஏ.,உமன்ஸ் விங்ஸ் அணியினர் வெற்றி பெற்றது.
மாவட்ட கிரிக்கெட் போட்டி சங்கம் சார்பில் 16 வயதுக்குட்பட்டோருக்கான ஸ்ரீமதி கோப்பைக்கான கிரிக்கெட் லீக் போட்டிகள்நடந்தது. ஆர்.வி.எஸ்.,கல்லுாரியில் நடந்த போட்டியில் திண்டுக்கல் மெஜஸ்டிக் சி.சி.அணி 40 ஓவர்களுக்கு 141 ரன்கள் எடுத்தனர். சிபி தர்சன் 44 ரன்கள்,பார்த்திபன் 4 விக்கெட் எடுத்தனர். வடமதுரை மாஸ்டர்ஸ் சி.சி. அணி 17 ஓவரில் 58 ரன்களுக்கு ஆல்அவுட் ஆகி தோல்வியடைந்தனர். ஸ்ரீவீ கல்லுாரியில் நடந்த போட்டியில் ஒட்டன்சத்திரம் சாய்புட்ஸ் கிரிக்கெட் அகாடமி அணியினர் 31.5 ஓவர்களுக்கு 115 ரன்கள் எடுத்தனர். சிட்டேஸ் கார்த்திக் 5 விக்கெட்,அக் ஷல் 3 விக்கெட் எடுத்தனர். ஒட்டன்சத்திரம் ஸ்ரீ கிருஷ்ணா எம்.ஹெச்.எஸ்.எஸ். அணியினர் 32.1 ஓவர்களுக்கு 6 விக்கெட் இழப்பில் 116 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர். தர்சன் 27 ரன்கள் எடுத்தார். விஷ்வஹரினி 3 விக்கெட் எடுத்தார். இவர்களை எதிர்த்து ஆடிய திண்டுக்கல் டி.சி.ஏ.,உமன்ஸ் விங்ஸ் அணியினர் 39 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்துவென்றனர்.