/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அ.தி.மு.க.,வை ஒழிக்க திட்டம் தீட்டுகின்றனர் சீனிவாசன் கண்டுபிடிப்பு
/
அ.தி.மு.க.,வை ஒழிக்க திட்டம் தீட்டுகின்றனர் சீனிவாசன் கண்டுபிடிப்பு
அ.தி.மு.க.,வை ஒழிக்க திட்டம் தீட்டுகின்றனர் சீனிவாசன் கண்டுபிடிப்பு
அ.தி.மு.க.,வை ஒழிக்க திட்டம் தீட்டுகின்றனர் சீனிவாசன் கண்டுபிடிப்பு
ADDED : டிச 27, 2024 02:52 AM
திண்டுக்கல்:''தேர்தல் நெருங்குவதால் அ.தி.மு.க.,வை எதிரியாக நினைத்து ஒழிக்க திட்டம் தீட்டுகின்றனர்''என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: அண்ணா பல்கலை பாலியல் புகார் குற்றவாளியாக கூறப்படும் நபர் துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடன் இருப்பது போல் புகைப்படம் வெளியாகி உள்ளது. சம்பந்தம் உள்ளதா,இல்லையா என்பது இனிமேல் தான் தெரியும். குற்றம் சாட்டப்பட்டவர் மீது 15 வழக்குகள் உள்ளது எனக் கூறப்படுகிறது. அ.தி.மு.க., பலவீனப்பட்டால் பா.ஜ., அந்த இடத்தில் அமர்ந்து விடும் என திருமாளவளவன் கூறியது அவருடைய கருத்து. அதற்கு நாங்களா பொறுப்பு. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கே கிடையாது. போலீசாரின் கைகள் கட்டப்பட்டுள்ளன. அனைத்தும் தி.மு.க., முதல்வர்,அமைச்சர்கள் கையில் உள்ளது. போலீசாரின் உண்மையான செயல்பாடுகள் எதுவும் கிடையாது. உதாரணமாக அண்ணா பல்கலையில் பெண்ணுக்கு ஏற்பட்டதை பார்க்கிறீர்கள். தினந்தோறும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது என்றார்.
த.வெ.க., தலைவர் விஜய் வீட்டிலிருந்து அரசியல் செய்கிறார் என்று அரசியல் தலைவர்கள் பேசியது குறித்த கேள்விக்கு, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் அவரது ஸ்டைலில் அரசியல் செய்கிறார். அதனை விமர்சிக்க முடியாது. விஜயுடன் கூட்டணி அமையுமா என ஜோசியமும் சொல்ல முடியாது. தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்படும். வன்னியர் இட ஒதுக்கீடு விவாகாரம் குறித்து பா.ம.க., தலைவர் ராமதாஸ் அருமையாக சண்டை போடுகிறார். தேர்தல் நெருங்குகிறது. அ.தி.மு.க.,வை எதிரியாக நினைத்து ஒழிக்க திட்டம் தீட்டுகின்றனர் என்றார்.

