ADDED : ஜன 20, 2025 05:49 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம், கொடைக்கானல் செயின்ட் பீட்டர்ஸ் பள்ளி இணைந்து நடத்தும் செயின்ட் பீட்டர்ஸ் கோப்பைக்கான மாவட்ட கிரிக்கெட் போட்டிகள் ஆர்.வி.எஸ்., பி.எஸ்.என்.ஏ., மற்றும் ரிச்மேன் மைதானங்களில் நடந்தது.
திண்டுக்கல் ஏஞ்சல் கேஸ்டர் சிசி அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 121/7. சரவணக்குமார் 43. சேசிங் செய்த மன்சூர் சிசி அணி 10.3 ஓவர்களில் 124/1 எடுத்து வெற்றி பெற்றது. பூபதிராஜா 53, சசிகுமார் 58 (நாட்அவுட்).
திண்டுக்கல் ஆர்.வி.எஸ்., ஸ்போர்ட்ஸ் கிளப் அணி முதலில் பேட்டிங் செய்து 16.2 ஓவர்களில் 118 க்கு ஆல்அவுட் ஆனது. ஹரிகிருஷ்ணன் 25, பாரத், ராஜேஷ்கண்ணன் தலா 3 விக்கெட். சேசிங் செய்த கொடைக்கானல் செயின்ட் பீட்டர்ஸ் சிசி அணி 13.4 ஓவர்களில் 123/2 எடுத்து வெற்றி பெற்றது. முகமதுவாஹீம் 38(நாட்அவுட்), பூபதி வைஷ்ணகுமார் 25, முருகானந்தம் 31(நாட்அவுட்).
முதலில் ஆடிய திண்டுக்கல் விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 20 ஓவர்களில் 192/8. சிவமுருகன் 37, வினோத்குமார் 29, கதிரேசன் 29, தீபன் 41(நாட்அவுட்), ரிச்சர்டு 3 விக்கெட். சேசிங் செய்த கொடைரோடு கொடை சிசி அணி 20 ஓவர்களில் 135/7 மட்டுமே எடுத்து தோற்றது. பிரபாகர் 51, தினேஷ் 44(நாட்அவுட்).
முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் வெற்றி சிசி அணி 19.4 ஓவர்களில் 83 க்கு ஆல்அவுட் ஆனது. ஸ்ரீமுகேஷ்வரன் 3 விக்கெட். சேசிங் செய்த விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் கிளப் ஜூனியர் சிசி அணி 8.5 ஓவர்களில் 86/1 எடுத்து வென்றது. அஜித்மணி 49(நாட்அவுட்).
திண்டுக்கல் மெஜஸ்டிக் சிசி அணி முதலில் ஆடி 20 ஓவர்களில் 169/5. லக்ஷமிநாராயணன் 74, முத்துகாமாட்சி 49, குமரவேல் 3 விக்கெட். சேசிங் செய்த சேலஞ்சர்ஸ் சிசி அணி 20 ஓவர்களில் 162/2 தோற்றது. முகமதுஆசிக் 65, அரிகரன் 28, பிரசாந்த் 4 விக்கெட்.
நத்தம் என்.பி.ஆர்., ஜி.ஐ., சிசி அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 151/9. அருண்குமார் 44, அருண்பாண்டி 33, ரமேஷ்புகழேந்தி 34, அருண்நிஷாந்த் 4 விக்கெட். சேசிங் செய்த ஒட்டன்சத்திரம் நைக் சிசி 20 ஓவர்களில் 136/7. விக்னேஷ் 34, நவீன்குமார் 28(நாட்அவுட்), ரமேஷ்புகழேந்தி 3 விக்கெட்.