/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
டூவீலர் வாங்கியதால் கத்திக்குத்து
/
டூவீலர் வாங்கியதால் கத்திக்குத்து
ADDED : நவ 10, 2024 04:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நிலக்கோட்டை : நிலக்கோட்டை அருகே எஸ். மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி காமையா 62.
இவர் அதே ஊரை சேர்ந்த அண்ணாமலை மூலமாக ரூ.22 ஆயிரம் மதிப்புள்ள டூவீலரை வாங்கினார்.
வாங்கிய பிறகு விசாரித்ததில் வண்டியின் மதிப்பு ரூ.16 ஆயிரம் என தெரிய வந்துள்ளது. கூடுதலாக பணம் வாங்கியதை கண்டித்து காமையாவும் அவர் மனைவியும் அண்ணாமலையிடம் கேட்டுள்ளனர்.
ஆத்திரமடைந்த அண்ணாமலை காமையாவை கையால் தாக்கியும் கத்தியால் கழுத்து , நெஞ்சு பகுதியில் குத்தி காயபடுத்தினார். காமையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நிலக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.