ADDED : ஜூலை 30, 2025 05:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : மணக்காட்டூரில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் நடந்தது. தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டிஅம்பலம், ஒன்றிய செயலாளர்கள் ரத்தினக்குமார், சேக் சிக்கந்தர்பாட்சா, நகர செயலாளர் ராஜ்மோகன் முன்னிலை வகித்தனர்.
மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துகுமார்சாமி, தாசில்தார் ஆறுமுகம், ஒன்றிய ஆணையாளர்கள் கிருஷ்ணன், மகுடபதி, மண்டல துணை வட்டாட்சியர்கள் சுந்தரபாண்டியன், பொன்னுச்சாமி கலந்து கொண்டனர்.