ADDED : அக் 17, 2025 01:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சித்தையன்கோட்டை: சித்தையன்கோட்டை பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. தாசில்தார் முத்துமுருகன் தலைமை வகித்தார்.
சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் தனுஷ்கோடி, பேரூராட்சி தலைவர் போதும் பொண்ணு, துணை தலைவர் ஜாகிர் உசேன், செயல் அலுவலர் ஜெயமாலு முன்னிலை வகித்தனர். மண்டல துணை தாசில்தார் அபிராமி, வட்ட வழங்கல் அலுவலர் அந்தோணி பங்கேற்றனர்.
* செந்துறையில் தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி தலைமை வகித்தார். தாசில்தார் ஆறுமுகம்,மத்திய ஒன்றிய செயலாளர் சேக் சிக்கந்தர் பாட்சா, ஒன்றிய ஆணையாளர்கள் கிருஷ்ணன், ரவீந்திரன், மார்க்சிஸ்ட் நிர்வாகி ஸ்டாலின் முன்னிலை வகித்தனர்.
தி.மு.க., மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துகுமார்சாமி, வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சுந்தரமூர்த்தி கலந்து கொண்டனர்.