/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வேம்பார்பட்டியில் நலன் காக்கும் ஸ்டாலின் முகாம்
/
வேம்பார்பட்டியில் நலன் காக்கும் ஸ்டாலின் முகாம்
ADDED : டிச 12, 2025 07:09 AM

கோபால்பட்டி: வேம்பார்பட்டியில் நலன் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம் தி.மு.க., மாவட்ட பொருளாளர் க.விஜயன் தலைமையில் நடந்தது.
முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டி அம்பலம்,மாவட்ட துணைச் செயலாளர் சுந்தர்ராஜன், தி.மு.க., சாணார்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் தர்மராஜன், வடக்கு ஒன்றிய செயலாளர் மோகன், மத்திய ஒன்றிய செயலாளர் ஜான் பீட்டர்,பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா,நத்தம் ஒன்றிய செயலாளர்கள் ரத்தினகுமார், பழனிச்சாமி முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் இளையராஜா வரவேற்றார்.
பொது மருத்துவம், எலும்பியல், மகப்பேறியல், மகளிர் மருத்துவம், குழந்தை மருத்துவம், இருதயவியல் நரம்பியல், தோல் மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், காது-மூக்கு-தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம், நுரையீரல் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெற்றனர். ஒன்றிய துணைச் செயலாளர் டாக்டர் காளியப்பன், பொதுக்குழு உறுப்பினர் முத்துக் குமாரசாமி, வழக்கறிஞர் அணி சுந்தரமூர்த்தி, தி.மு.க., ஊராட்சி செயலாளர் வெள்ளைச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் ஜான் கென்னடி நன்றி கூறினார்.

