ADDED : டிச 12, 2025 07:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: தமிழக அரசு உத்தரவின் படி நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் மாநகராட்சி துாய்மை பணியாளர்கள், துாய்மை காவலர்கள், டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் ,பொது மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.
அதன்படி திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி, கமிஷனர் செந்தில் முருகன் உத்தரவுபடி மாநகராட்சி துாய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் நடந்தது. மாநகர சுகாதார அலுவலர் ராம்குமார் தலைமை வகித்தார். காசநோய், எக்ஸ்ரே, சளி பரிசோதனை இலவசமாக பரிசோதிக்கப்பட்டது. மாவட்ட சுகாதார அலுவலர்கள், சுகாதார மேற்பார்வையாளர் செய்திருந்தனர்.

