ADDED : டிச 07, 2024 06:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: தமிழ்நாடு டானபெக்ஸ் -24 அஞ்சல் வட்டம் சார்பில் மாவட்ட அளவிலான தபால் தலை வினாடி வினா போட்டி நடந்தது. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 15 பள்ளிகள் கலந்து கொண்டதில் ஒட்டன்சத்திரம் அக் ஷயா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் பி.டேனியல் கிறிஸ்டியன் சிஜாய், கோகுலவர்ஷினி, பிரீத்தி மாவட்ட அளவில் மூன்றாம் இடத்தை கைப்பற்றினர்.
வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட தலைமை தபால் நிலையத்தில் சான்றிதழ் வழங்கப்பட்டது. மாணவர்களை பள்ளி நிர்வாகி புருஷோத்தமன், தாளாளர் சுந்தராம்பாள், செயலாளர் பட்டாபிராமன், பள்ளி முதல்வர் சவும்யா, ஒருங்கிணைப்பாளர் விசாலாட்சி பாராட்டினர்.