sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மத்திய அரசு திட்டத்தால் 'ஸ்டார் அந்தஸ்து': பாடக்கூடத்தில் உபகரண புரட்சி

/

மத்திய அரசு திட்டத்தால் 'ஸ்டார் அந்தஸ்து': பாடக்கூடத்தில் உபகரண புரட்சி

மத்திய அரசு திட்டத்தால் 'ஸ்டார் அந்தஸ்து': பாடக்கூடத்தில் உபகரண புரட்சி

மத்திய அரசு திட்டத்தால் 'ஸ்டார் அந்தஸ்து': பாடக்கூடத்தில் உபகரண புரட்சி


ADDED : பிப் 11, 2024 01:18 AM

Google News

ADDED : பிப் 11, 2024 01:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்


திண்டுக்கல் ஜி.டி.என்.கல்லுாரி மத்திய அரசின் டி.பி.டி. எனும் டிபார்மென்ட் ஆப் பயோடெக்னாலஜியின் ஸ்டார் அந்தஸ்து தகுதி பெற்றுள்ளது. இதன் மூலம் ஜி.டி.என். கல்லுாரியானது இனிவரும் மூன்று ஆண்டுகளில் அறிவியல் துறை கல்வி மேம்பாட்டிற்கான கல்வி வளர்ச்சி நிதியாக ரூ.82லட்சம் ஒதுக்கீட்டை பெற்றுள்ளது . இதற்கு முன்னோடியாக தேசிய தர மதிப்பீட்டு குழுவால் ஏ.பிளஸ்.பிளஸ். எனும் உயர்ந்தபட்சதரசான்றிதழ் அங்கிகாரம் ஜி.டி.என்.கல்லுாரி பெற்றுள்ளது சாதனைகளில் மேலும் ஒரு மைல்கல்லாக விளங்குகிறது. நாட்டிலுள்ள பல லட்சம் கலை அறிவியல் கல்லுாரிகளில் 342 கல்லுாரிகளை மட்டுமேஇந்த சிறப்பு தகுதிக்கு டி.பி.டி. ,துறை தேர்ந்தெடுத்துள்ளது. இதில் திண்டுக்கல் ஜி.டி.என்.கலை கல்லுாரியானது முத்திரை பதித்து மத்திய அரசின் கல்வி நிதியை பெற்று வந்ததை பேராசிரியர் முதல் பணியாளர்கள், மாணவர்கள் சாதனையாகவே பாவித்து மகிழ்கின்றனர். ஆக்ஸ்போர்டு பல்கலை தரத்திலான கல்வி நமது மாவட்டத்திற்கும் சாத்தியப்படும் என்ற சூழலை ஜி.டி.என்.கல்லுாரிக்கு மத்திய அரசு கல்வி பரிசாக அளித்துள்ளது.

சமவளர்ச்சிக்கு வித்திடுகிறது


பாலகுருசாமி, முதல்வர் : உடலில் அனைத்து பாகங்களும் வளர்வதே வளர்ச்சியாகும். குறிப்பிட்ட ஓரிரு இடத்தில் மட்டும் வளர்வதானால் அது உடல் வியாதியான வீக்கமாகும். அதே பாணியில் மத்திய அரசின் டி.பி.டி., துறை சார்பில் ஒதுக்கப்பட்ட

நிதியானது சமவளர்ச்சி கல்விக்கு வித்திட்டுள்ளது. மத்திய அரசின் நிதியுதவி விண்ணப்பத்திற்கான விளக்கத்தை ஆன்லைனின் மூலமாகவே சமர்ப்பித்து எப்.எப்.சி.கமிட்டியின் பரிசீலனையில் நிறைவு செய்தது என்பது கல்லுாரி ஆசிரியர்களின் அளப்பறிய திறமைகளை பறைசாட்டுகிறது.

கிராமப்புற மாணவர்களின் வரப்பிரசாதம்


ரெத்தினம், தாளாளர்: நவீன அலைபேசி காலத்தில் உயிரியியல், தாவரவியல் பாடப்பிரிவுகளில் சேர்ந்து படிக்கும் ஆர்வமானது மாணவர்களிடையே குறைந்து வருகிறது. குறிப்பாக பல்வேறு பிரிவுகளின் கணித பாடத்தை மாணவர்கள் தவிர்த்து வேறுதுறை கல்வியை தேர்ந்தெடுக்கின்றனர். தற்போது டி.பி.டி.துறையின் நிதி ஒதுக்கீட்டால் இந்த குறை முற்றிலும் தவிர்க்கப்படும் நிலை உள்ளது. இதன்மூலமாக கொண்டு வரப்பட்டுள்ள பாடப்பிரிவின் நவீன உபகரணங்களால் மாணவர்களின் செய்முறை பயிற்சியிலான பாடத்திட்டம் எளிதானதாக புரிந்து கொள்ள உதவும். கிராம மாணவர்களுக்கு இத்திட்டத்தின் கல்வி பலன் ஒரு வரப்பிரசாதமாகும்.

சிறந்த பாடத்திட்டத்திற்கு வழிகாட்டி


ராஜேந்திரன், பேராசிரியர் :மத்திய அரசின் டி.பி.டி. நிதியில் இருந்து டெஸ்க் டாப் கம்யூட்டர் வகையறாவில் மட்டுமே 20 கம்ப்யூட்டர்கள் ரூ.6லட்சத்து 80 ஆயிரத்துக்கு புதிதாக வாங்கப்பட்டுள்ளது. இதுதவிர லேன்ட் சுவிட்ச் கன்ரோலர், பென்டாஸ்டிக் மீரர்ஸ், பிதாகோரஸ் பாடதிட்ட உபகரணம், பினிக், யுனிக் சொலியூசன், இயற்பியல் பாடத்திற்கான

பி.ஹெச்.சி மீட்டர், பொட்டோன்சியோ மீட்டர், கண்டக்டிவிட்டி மீட்டர், டிஜட்டல் போட்டோ குளோரி மீட்டர், வாட்டர் சாயல் அனலைசர், பயோகெமிக்கல் ஆக்சிஜன் அனலைசர், ஹார்ட் ஏர் ஓவன், சென்ட்ரி பியூர்ஸ், எலக்ரானிக் பேலன்ஸ் உபகரணம், வாட்டர் பாத் சேக்கர், செர்லாஜிகல் வாட்டர் பாத் டிஜிட்டல் ஆகிய உபகரணங்களின் புதிதான வருகையால் உலகின் தலைசிறந்த பல்கலை பாட கல்வி திட்டத்திற்கு வழிகாட்டி உள்ளது.

அறிவுநிதி திட்டமாக உள்ளது


ரேணுகா தேவி, பேராசிரியை: மத்திய அரசின் கல்வி நிதி திட்ட உதவியால் இன்டன்சிவ் டிரெயினிங், பெரிய அளவிலான செமினார், தேசிய,பன்னாட்டு, தமிழக அளவிலான கருத்து பட்டறை கூட்டம், கல்வியறிவு செயல்முறை திட்டம் ஆகியவை புத்துணர்வு பெற்று மீண்டும் மாணவர்களை நலிந்து வரும் பாடப்பிரிவுகளை நோக்கி வரவழைக்கும். மத்திய அரசின் பல்கலை மானிய குழு வழங்கும் நிதியை ஒரு துறைக்கு ரூ.22 லட்சம் வீதம் 3 ஆண்டுகளுக்கு செலவிடப்படும்

மாணவர்களுக்கான அறிவுநிதி திட்டமாகவே இந்த நிதி உதவுகிறது. மத்திய அரசின் இந்த நிதியுதவி சலுகை பெறுவதால் மட்டுமே எங்கள் கல்லுாரிக்கு ஸ்டார் அங்கீகாரம் கிடைத்தது .

மாணவர்களுக்கான வரப்பிரசாதம்


இன்பன் பிரசன்னா, வேதியியல் 3ம் ஆண்டு மாணவி :இந்திய அறிவியல் ,தொழில்நுட்ப அமைச்சகம், உயிரிதொழில் நுட்பவியல் துறையின் சார்பில் துல்லியமான விலங்கியல் பாட விளக்கத்திற்கான பைனாகுலர் மைக்ரோஸ்கோப், ஹார்ட் ஏர் ஓவன், மைக்ரோடோன்,

யூ.வி.விசிபில் ஸ்பெக்ட்ரோ போட்டோ மீட்டர், ஸ்டீரியோ ஜூம் மைக்ரோஸ்கோப், வெரிட்டிகல், ஹரிசாண்டல் எலக்ட்ரோ போரோசிஸ் வித் மினி பவர்பேக் உபகரண வசதிகள் எங்களுக்கு வந்தடைந்துள்ளது. இந்த பாடதிட்டத்தில் இனி கல்வி கற்கும் மாணவர்கள் எளிதாக புரிந்து பயில்வர். இது சம்மந்தப்பட்ட கல்வி பிரிவு மாணவர்களுக்கான வரப்பிரசாதமாகும்.

லேப்களில் புத்துணர்வு


முத்துலெட்சுமி, வேதியியல் முதலாமாண்டு மாணவி :கிராம கல்லுாரிக்கான அங்கீ காரமாக ரூ.42 லட்சத்திற்கான ஒதுக்கீட்டில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் துறைகளின் செய்முறை பயிற்சி கூடமான லேப்கள் நவீன உபகரணங்களுடன் புத்துணர்வாக உள்ளது.இதனால் மாணவர்களான எங்களின் கற்றல் ஈடுபாடு மேலும் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு டிபார்ட்மென்டுக்கும் ரூ.10 லட்சம் நிதி ஒதுக்குவதாக அறிந்து மட்டடற்ற மகிழ்வடைந்து உள்ளோம்.

முதுகலை கல்வியையும் தொடர்வோம்


சுந்தரேஷ்வரன் சுந்தரவடிவேல், விலங்கியல் பிரிவு மாணவர் : கிராம கல்வி நிலையத்தில் இத்தனை வசதிகள் மத்திய அரசின் நிதியுதவி திட்டத்தில் கொண்டு வந்திருப்பது மகிழ்ச்சியின் எல்லைக்கே எங்களை கொண்டு சென்றுள்ளது. ஆய்வு உபகரணங்களில் போதிய சாதனங்கள்இருப்பதால் முதுகலை கல்வியிலும் இந்த கல்லுாரியை தொடர்வது என முடிவெடுத்துள்ளோம். இதற்கான முயற்சியை தொடர்ந்து வெற்றி கண்ட அனைத்து தரப்பு ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு நன்றியை சமர்ப்பிக்கிறோம்.






      Dinamalar
      Follow us