UPDATED : ஆக 08, 2026 08:56 PM
ADDED : ஆக 08, 2026 08:31 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்:திண்டுக்கல்லில் தமிழக நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர்கள் சங்க மாநில பொதுக்குழுக்கூட்டம் யூனியன் கிளப்பில் நேற்று நடந்தது.
மாநில தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். கோட்ட செயலாளர் ஹரிபாலக்குமார், கவுரவ பொதுச்செயலாளர் மாரிமுத்து முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் குருசாமி பங்கேற்று பேசினார்.
கூட்டத்தில் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப வலியுறுத்தி மண்டல தலைமை பொறியாளர் அலுவலகங்கள் முன் 4 கட்டங்களாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட 12 அம்ச தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் மாவட்ட, மாநில நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
