/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
உறுப்புகளை தானம் செய்தவர் உடலுக்கு அரசு மரியாதை
/
உறுப்புகளை தானம் செய்தவர் உடலுக்கு அரசு மரியாதை
ADDED : ஜன 30, 2024 07:02 AM

வடமதுரை : வடமதுரை அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்து உறுப்புகளை தானம் செய்த முடித்திருத்தும் தொழிலாளி உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
வேல்வார்கோட்டை புதுப்பாளையத்தை சேர்ந்த சண்முகம் மகன் செல்வகுமார் 41. வடமதுரை ஆண்டிமாநகரில் சலூன் கடை நடத்தி வந்தார். ஜன. 25 இரவு அக்கரைப்பட்டி ரோட்டில் காணப்பாடி அருகே டூவீலரில் சென்றபோது நிலைத்தடுமாறி விழுந்ததில் தலையில் காயமடைந்தனர்.
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மூளைச்சாவால் நினைவு திரும்பவில்லை. நேற்று இறந்ததையடுத்து இவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இதன் பின்னர் இறுதிச் சடங்குகிற்காக புதுப்பாளையம் கிராமத்திற்கு நேற்று மாலை உடல் கொண்டுவரப்பட்டது.
அங்கு திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி, பழநி ஆர்.டி.ஓ., சரவணன், வேடசந்துார் தாசில்தார் விஜயலட்சுமி, ஆயுதப்படை டி.எஸ்.பி., ஆனந்தராஜன், இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர் உறவினரகளுக்கும் ஆறுதல் தெரிவித்தனர்.