/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மருத்துவமனைகளில் அவுட் போஸ்ட் மாநில பொதுச்செயலாளர் வலியுறுத்தல்
/
மருத்துவமனைகளில் அவுட் போஸ்ட் மாநில பொதுச்செயலாளர் வலியுறுத்தல்
மருத்துவமனைகளில் அவுட் போஸ்ட் மாநில பொதுச்செயலாளர் வலியுறுத்தல்
மருத்துவமனைகளில் அவுட் போஸ்ட் மாநில பொதுச்செயலாளர் வலியுறுத்தல்
ADDED : நவ 15, 2024 05:43 AM
திண்டுக்கல்: ''அரசு மருத்துவமனை,அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் அவுட் போஸ்ட் உருவாக்க வேண்டும்''என தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்க மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன் கூறினார்.
திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: அரசு டாக்டர்களுக்கும்,பணியாளர்களுக்கும் பணி செய்யும் இடத்தில் பாதுகாப்பு வழங்க வேண்டும். கோல்கட்டா டாக்டர் தாக்கப்பட்ட போதே இதே கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தினோம். அரசு மருத்துவமனை,அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் அதிக அவுட் போஸ்ட் உருவாக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு கொடுக்க முடியாத நிலையில் பாதுகாவலர்கள் வைக்க வேண்டும். அரசு உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டும். கிண்டி மருத்துவமனையில் டாக்டரை தாக்கிய குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். தினமும் அரசு மருத்துவமனைக்கு ஆயிரக்கணக்கில் நோயாளிகள் வருகின்றனர். இழப்பு என்பது யாராலும் தாங்க முடியாது. மருத்துவமனையில் இழப்பு என்பது நடக்க கூடியது. உணர்ச்சிவசத்தில் உடன் இருப்பவர்கள் மருத்துவர்களை தாக்கும் நிலை ஏற்படுகிறது. பாதுகாப்பை அதிகரிக்க வலியுறுத்தி இன்று முதல் வெளி நோயாளிகள் புறக்கணிப்பு நடத்துகிறோம். புற நோயாளிகள் பிரிவு புறக்கணிப்பதாக முடிவு செய்துள்ளோம் என்றார்.