/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அரசு ஊழியருக்கு முதல்வர் நம்பிக்கை துரோகம் சங்க மாநிலச் செயலாளர் ஆவேசம்
/
அரசு ஊழியருக்கு முதல்வர் நம்பிக்கை துரோகம் சங்க மாநிலச் செயலாளர் ஆவேசம்
அரசு ஊழியருக்கு முதல்வர் நம்பிக்கை துரோகம் சங்க மாநிலச் செயலாளர் ஆவேசம்
அரசு ஊழியருக்கு முதல்வர் நம்பிக்கை துரோகம் சங்க மாநிலச் செயலாளர் ஆவேசம்
ADDED : பிப் 11, 2025 07:50 AM

ராமநாதபுரம் : அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்து ஓட்டுகளை வாங்கிய முதல்வர் ஸ்டாலின் அவற்றை நிறைவேற்றாமல் நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டார் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் நீதிராஜா கண்டனம் தெரிவித்தார்.
ராமநாதபுரத்தில் நடந்த அரசு ஊழியர் சங்கத்தின் 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் பங்கேற்ற அவர் கூறியதாவது:
அ.தி.மு.க., ஆட்சியில் 10 ஆண்டுகளாக அரசு ஊழியர்களின் கோரிக்கைளை நிறைவேற்றாததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய போது, உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம் என எதிர்க்கட்சியாக இருந்த ஸ்டாலின் கூறினார்.
அதனை தேர்தல் வாக்குறுதியாகவும் கூறி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓட்டுகளை பெற்று வென்றார்.
முதல்வர் ஆன பிறகு பழைய பென்ஷன் திட்டம் உட்பட எதையும் நிறைவேற்றாமல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டார்.
இதனை கண்டித்து போராட்டம் நடத்துகிறோம். 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.25ல் மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம், மார்ச் 19ல் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது.
அதன் பிறகு காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யவும் திட்டமிட்டுள்ளோம் என்றார். ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் விஜயராமலிங்கம் உடனிருந்தார்.
சிவகங்கையில் சங்க மாநில செயலாளர் ஏ.ஜெசி கூறியது:
சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சாலைப்பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை முறைப்படுத்த வேண்டும்.
ஊழியர், ஆசிரியர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தை அரசே ஏற்று நடத்தவேண்டும். கருணை அடிப்படை பணி நியமன ஒதுக்கீட்டை 25 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை தொடர்ந்து தமிழக அரசிடம் வலியுறுத்தி வருகிறோம் என்றார்.