ADDED : மார் 18, 2024 06:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : -நத்தம் எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்69.
இவர் நேற்று முன்தினம் நத்தம்- யூனியன் அலுவகம் எதிரே உள்ள கனரா வங்கியில் நகையை அடகு வைத்து விட்டு ரூ.1 லட்சத்து 42 ஆயிரம் பணத்தை பெற்றார். அதை தன் டூவீலரில் கொண்டு சென்றார். இவரை பின் தொடர்ந்த மர்ம நபர் ஒருவர் பையில் இருந்த பணத்தை திருடி அங்கிருந்து தப்பினார். நத்தம் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி விசாரிக்கிறார்.

