/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தடுத்து நிறுத்துங்க...: நெடுஞ்சாலைகளில் விழும் ஜல்லிக்கற்கள்: விபத்தில் சிக்கும் டூவீலர், காரில் செல்வோர்
/
தடுத்து நிறுத்துங்க...: நெடுஞ்சாலைகளில் விழும் ஜல்லிக்கற்கள்: விபத்தில் சிக்கும் டூவீலர், காரில் செல்வோர்
தடுத்து நிறுத்துங்க...: நெடுஞ்சாலைகளில் விழும் ஜல்லிக்கற்கள்: விபத்தில் சிக்கும் டூவீலர், காரில் செல்வோர்
தடுத்து நிறுத்துங்க...: நெடுஞ்சாலைகளில் விழும் ஜல்லிக்கற்கள்: விபத்தில் சிக்கும் டூவீலர், காரில் செல்வோர்
ADDED : ஜூலை 08, 2025 01:48 AM

- வடமதுரை: திண்டுக்கல் மாவட்டத்தில் நெடுஞ்சாலைகளில் விழும் ஜல்லி கற்கள், தென்னம்மட்டைகள், விறகுகள், வாகனங்களில் சிக்கி உயிரிழக்கும் நாய் உள்ளிட்ட கால்நடைகளின் உடல்கள் அகற்றப்படாமல் அப்படியே கிடக்கும் நிலையால் டூவீலர், கார் போன்ற சிறிய ரக வாகனங்களில் செல்வோர் விபத்துகளில் சிக்கி பாதிப்படைகின்றனர்.
மாவட்டத்தில் பல நகரங்களை இணைக்கும் முக்கிய ரோடுகள் தற்போது அகலமாக்கப்பட்டு நான்குவழிச்சாலைகளாகவும், தேசிய நெடுஞ்சாலைகளாகவும் மாற்றப்பட்டுள்ளன. செல்வதற்கு, திரும்பி வர என இரு தனித்தனி வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் வாகனங்களின் வேகமும் அதிகமாக உள்ளது. குறிப்பிட்ட இடங்களில் வாகனங்களின் வேகத்திற்கு கட்டுப்பாடுகள் விதித்து அறிவிப்பு பலகைகள் வைத்திருந்தாலும் சில வாகன ஓட்டிகள் பொருட்படுத்தாமல் செல்வதால் விபத்துகள் நடக்கின்றன. உயிரிழப்புகளும் அதிகம் நடக்கின்றன. கிராம ரோடுகளை பொறுத்தவரை அசாம்பவிதம் ஏற்பட்டாலோ , ஏற்பட வாய்ப்பு இருந்தாலோ, பள்ளி, அங்கன்வாடி மையங்கள் இருந்தலோ அப்பகுதியில் வேகத்தடைகளை அமைத்துவிடுவர். ஆனால் நான்குவழிச்சாலையில் இஷ்டத்திற்கு வேகத்தடைகளை அமைக்க முடியாத நிலையில் போலீசாருக்கு கிடைத்த ஒரு ஆயுதம் பேரி கார்டுகள்.
நான்குவழிச்சாலை, மாநில நெடுஞ்சாலைகளில் ஏராளமான இடங்களில் பேரி கார்டுகள் வைக்க வாகனங்களின் வேகம் இப்பகுதியில் கண்டிப்பாக குறைத்தே ஆக வேண்டும் என்ற கட்டாய நிர்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்விடங்களில் வேகமாக வரும் டிப்பர், லாரி போன்றவற்றில் இருந்து கற்கள், தென்னை மட்டைகள், விறகுகள், செங்கல் என பலவித பொருட்கள் கிழே விழுந்து அப்படியே அப்புறப்படுத்தாமல் கிடப்பில் விடப்படுகின்றன. இவற்றின் மீது டூவீலர்கள் ஏறும்போது தடுமாற்றம் ஏற்பட்டு அருகில் செல்லும் மற்ற வாகனங்களுடன் மோதி கொடூர விபத்துக்கு வாய்ப்பாக உள்ளது. டூவீலருடன் தவறி விழுந்து பாதிப்படையும் ஆபத்தும் உள்ளது. சரக்கு வாகனங்களில் ஏற்றப்படும் ஜல்லி கற்கள், விறகு, தென்னை மட்டைகள் வழிநெடுக விழுந்து கொண்டே செல்லும் நிலையும் உள்ளது. இதுபோன்ற அலட்சியங்களை கட்டுப்படுத்த துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-......
-
வடமதுரை ஒட்டன்சத்திரம் நெடுஞ்சாலை, அய்யலுார் திண்டுக்கல் நான்குவழிச்சாலை என பல ரோட்டோரங்களில் மணல் பெருமளவில் தேங்கி கிடக்கிறது. லாரிகளில் இருந்து விழுந்த பலவித பொருட்கள் அப்படியே கிடக்கின்றன. இதுதவிர மனித ஆதரவற்ற நிலையில் வளரும் நாய் போன்ற கால்நடைகளும் வாகனங்களில் சிக்கி உயிரிழக்கின்றன. இவையும் முறையாக அகற்றப்படாமல் அதே இடங்களில் க பல நாட்கள் வரை கிடக்கின்றன. இரவு நேரங்களில் இருளில் கிடப்பது தெரியாமல் இவற்றின் மீது ஏறும் டூவீலர்கள் விபத்தில் சிக்க பெரிய ஆபத்தாக மாறுகிறது. மாவட்ட நிர்வாகம் இவ்விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
- -எஸ்.ஜெயக்குமார், முன்னாள் மாநில தலைவர், தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கம், அய்யலுாார்.
-