/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மணல் கடத்தலை தடுங்க... உரிய இழப்பீடு வழங்குங்க குறைதீர் கூட்டத்தில் முறையீடு
/
மணல் கடத்தலை தடுங்க... உரிய இழப்பீடு வழங்குங்க குறைதீர் கூட்டத்தில் முறையீடு
மணல் கடத்தலை தடுங்க... உரிய இழப்பீடு வழங்குங்க குறைதீர் கூட்டத்தில் முறையீடு
மணல் கடத்தலை தடுங்க... உரிய இழப்பீடு வழங்குங்க குறைதீர் கூட்டத்தில் முறையீடு
ADDED : மே 27, 2025 01:23 AM
திண்டுக்கல்: மணல் கடத்தலை தடுக்க வேண்டும், உரிய இழப்பீடு வழங்குங்க, கோயில் நிலம், கல்லறைத்தோட்டம் ஆக்கிரமிப்பு என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக குறைதீர் கூட்டத்தில் பலரும் முறையிட்டனர்.
டி.ஆர்.ஓ., ஜெயபாரதி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் 300 க்கு மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. கோரிக்கை மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
மணல் கடத்தலை தடுங்க
ஜம்புதுரைக்கோட்டை ஜெ.மெட்டூர் கிராம மக்கள் அளித்த மனுவில், சிறுமலை அடிவாரத்தில் வன துறைக்கு சொந்தமான இடத்தில் 60 முதல் 70 அடி ஆழம் தோண்டி முறைகேடாக மண் எடுத்து கடத்தலில் ஈடுபடுகின்றனர். இதுதொடர்பாக பொதுமக்கள் கேள்வி எழுப்பியதற்கு சம்மந்தப்பட்ட நபர்கள் அரசியல் செல்வாக்குடன் மிரட்டுகின்றனர்.
அதிகாரிகளிடம் புகார் அளித்தாலும் தன் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என அந்த நபர் வெளிப்படையாக தெரிவிக்கிறார். கலெக்டர் கள ஆய்வு செய்து மண் கடத்தலை தடுத்து சம்மந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
உரிய இழப்பீடு வழங்குங்க
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலர் ராமசாமி, தலைவர் பெருமாள், மார்க்சிஸ்ட் சரத்குமார் உள்ளிட்டோர் தலைமையில் அளித்த மனுவில். திண்டுக்கல் கிழக்கு பகுதி கிராமங்கள் வழியாக ரிங் ரோடு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மார்கெட் மதிப்பிலிருந்து மும்மடங்கு இழப்பீடு தருவதாக வாய்மொழியாக கூறப்பட்டது. தற்போது ரூ.கோடிக்கணக்கான மதிப்புள்ள நிலத்திற்கு சில லட்சங்கள் தான் வரும் என்கின்றனர்.
இந்த நிலங்களை நம்பிதான் வாழ்வாதாரம் இருக்கிறது. ரோடு அமைக்கும் நிலங்களில் தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயிகளின் நிலங்களை அடிமாட்டு விலைக்கு எடுக்கக் கூடாது என தெரிவித்துள்ளனர்.
கோயில் நிலம் ஆக்கிரமிப்பு
பள்ளபட்டி, பூதமரத்துப்பட்டி கிராம மக்கள் அளித்த மனுவில், முத்தாலம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி ஊர்மக்களை தனி நபர்கள் சிலர் மிரட்டுகின்றனர். கோயில் திருவிழா, நாடகம் போன்றவற்றை நடக்கவிடாமல் இடையூறு ஏற்படுத்துகின்றனர்.
போலீசாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
மதுரை ரோடு தோமையார்புரம் பகுதி மக்கள் அளித்த மனுவில், பள்ளப்பட்டி அருகே நீண்டகாலமாக பயன்படுத்தி வந்த கல்லறை தோட்டம் உள்ளது. இதனை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். எதிர்த்து கேட்டால் முடிந்ததை பாருங்கள் என்கின்றனர்.
போலீசார், தாசில்தார் என மனு அளித்தும் பயனில்லை. கலெக்டர் தலையீட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.