/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கொடைக்கானலில் சூறைக்காற்றுடன் சாரல்
/
கொடைக்கானலில் சூறைக்காற்றுடன் சாரல்
ADDED : டிச 12, 2024 02:23 AM

கொடைக்கானல்:- கொடைக்கானலில் சூறைக்காற்றுடன் சாரல் மழை பெய்த நிலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான கொடைக்கானலில் நேற்று முன்தினம் இரவு முதல் சூறைக் காற்று வீசி வருகிறது. நேற்று காலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் அடர் பனிமூட்டம் நிலவி மதியத்திற்கு பின் சாரல் பெய்தது. காற்றில் ஈரப்பதம் அதிகரித்து கடுங்குளிர் நிலவியது.
தாண்டிக்குடி கீழ்மலை பகுதியில் பலத்த சூறைக்காற்றால் வத்தலக்குண்டு ரோட்டில் தடியன் குடிசையில் மரம் விழுந்து 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறையினர் மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.