/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல் புத்தகத் திருவிழாவில் கதை சொல்லல்
/
திண்டுக்கல் புத்தகத் திருவிழாவில் கதை சொல்லல்
ADDED : செப் 05, 2025 02:41 AM

கவிதை அழகு
சவுமியா, முதலாம் ஆண்டு கல்லுாரி மாணவி, வேடசந்துார்: கவிதை புத்தகங்களை விரும்பி படிப்பேன். நான் எதிர்பார்த்து வந்த எல்லா கவிஞர்களின் புத்தகங்களையும் ஒரே இடத்தில் வாங்க முடிந்தது. தமிழே அழகு, அதில் கொஞ்சல், அழுகை, கோபம், காதல், வெறுமை, தலைவன், தேடல், ரசனை என கவிதைகளை அழகுற வாசிப்பது இன்னும் அழகு. எனக்கு நா.முத்துக்குமார் எழுதிய கவிகள் பிடிக்கும்.
துவக்கமான வாசிப்பு பயணம்
விக்னேஷ், பள்ளி மாணவர், தொப்பம்பட்டி: முதன்முதலாக புத்தக திருவிழாவிற்கு வருகிறேன். சுயசரிதை, சரித்திரம், புரட்சியாளர்களின் வரலாறு சார்ந்த கதைகளை கேட்டிருக்கிறேன். நான் கேட்டறிந்த கதைகளிலிருந்து எனக்கு பிடித்தமான புரட்சியாளரான 'சேகுவேரா' பற்றிய புத்தகத்தை வாங்கியிருக்கிறேன். இதிலிருந்து என் வாசிப்பு பயணத்தை துவங்க உள்ளேன். இன்னும் நிறைய புத்தகங்கள் வாங்க வேண்டும்.
எதிர்பாராததை எதிர்பாருங்கள்
முகமது அல்பர், ஒட்டன்சத்திரம்: எனது மாமா புத்தக பிரியர். எனது நண்பன் காமிக்ஸ் வெறியன். அவர்களை பார்த்து ஏற்பட்ட உந்துதலால் இங்கு வந்தேன். நான் டிரேடிங் கற்றுக்கொண்டிருக்கிறேன். அதில் கமர்சியல் உட்பட பல்வேறு வகைகளில் டிரேடிங் புத்தகங்கள் இங்கு கிடைக்குமென்பதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதுதவிர குர்ஆன், ஹிந்து சமய இலக்கியங்கள் என ஸ்பிரிட்சுவல் நுால்களுக்கு தனி ஸ்டால்கள் இருப்பது புதிதாக தெரிகிறது. மொழிபெயர்ப்பு நுால்கள், வெளிநாட்டு எழுத்தாளர்கள் புத்தகங்களும் ஏராளம் உள்ளது.
விழிப்புணர்வு இல்லை
ஜோ வின்சிலா, இதழியல் பேராசிரியை: திண்டுக்கல்: அதிக ரீவியூ பெற்ற புத்தகம், புக் ரீவியூவர்கள், பாட்காஸ்ட்டில் ஒலி வடிவில் கேட்ட புத்தகம், பரிந்துரை புத்தகங்கள் என தற்காலத்தில் டிரென்ட் ஆன அனைத்து புத்தகங்களும் ஏராளமாக உள்ளது. 1950 ல் வெளியான புகழ்பெற்ற 'பாரன் ஹீட் 451 புத்தகத்தை வாங்க முடிந்ததில் மகிழ்ச்சி. குழந்தைகள், மாணவர்கள் எல்லோருக்கும் தேவையான புத்தகங்கள் ஏ.ஐ.,கல்வி, தொழில்நுட்ப வளர்ச்சி, புத்தாக்க பயிற்சி புத்தகங்கள் நிறைய உள்ளது. ஆனால் அது பற்றிய விழிப்புணர்வு போதுமான அளவு இல்லாததே வருத்தம்.