/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கொடைக்கானலில் சிறுவனை கடித்து குதறிய தெருநாய்கள்
/
கொடைக்கானலில் சிறுவனை கடித்து குதறிய தெருநாய்கள்
ADDED : டிச 03, 2024 07:10 AM

கொடைக்கானல்: கொடைக்கானலில் தெருநாய்கள் சிறுவனை கடித்து குதறியது. இதில் பாதிக்கப்பட்ட அவர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் இந்திராநகரை சேர்ந்தவர் ராஜா .இவரது மகன் சலேத் நோவா 8. மூன்றாம் வகுப்பு பயிலும் இவர் நேற்று முன்தினம் கடைக்கு சென்று திரும்புகையில் அங்கு சுற்றித் திரிந்த தெருநாய்கள் கடித்து குதறின.சிறுவனின் அலறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் நாய்களை விரட்டினர்.
10 இடங்களில் நாய்களால் கடிப்பட்ட இவர் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொடைக்கானல் நகராட்சி பகுதியில் பெருகியுள்ள தெரு நாய்களால் பொதுமக்கள் தாக்கப்படும் சம்பவம் அதிகரித்து வருகிறது. கேட்பாரற்ற நிலையில் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை கட்டுப்படுத்த பொதுமக்கள் புகார் தெரிவித்தும் நகராட்சி அதிகாரிகள் மெத்தனப்போக்கோடு உள்ளனர்.
ப்ளூ கிராஸ் அமைப்பும் இதில் அக்கறை கொள்ளாது நாய்களை பாதுகாக்கும் நோக்கில் செயல்படுகின்றனர்.
இத்தகைய அலட்சியத்தால் நாள்தோறும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பாதிக்கும் நிலை தொடர்கிறது.