நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொப்பம்பட்டி: பழநி அருகே தும்பலப்பட்டியில் 37 ஏக்கர் உபரி நிலம் அரசு சார்பில் வழங்கப்படுவது குறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இடைக்கால உத்தரவு பெறப்பட்டுள்ளது.
அதனை அமல்படுத்த வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பழநி அருகே தும்பலப்பட்டியில் போராட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் சண்முகம், பொருளாளர் பெருமாள், பொதுச் செயலாளர் அமிர்தலிங்கம், மாவட்ட செயலாளர் அருள் செல்வன், தலைவர் வசந்தா மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

